எல்லா கட்டுரைகளுக்கும் செல்லுங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மலேரியாவின் வகைகள்

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மலேரியாவின் வகைகள்

மலேரியா என்பது ப்ளாஸ்மோடியம் என்கின்ற ஒட்டுண்ணியை எடுத்துச் செல்லும் பாதிக்கப்பட்ட அனாஃபெலிஸ் கொசுவின் கடி மூலம் பரவும் ஒட்டுண்ணி நோயாகும். கொசு கடிக்கும்போது, இந்த ஒட்டுண்ணி உங்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து, சிவப்பு இரத்த அணுக்களை (RBC) பாதிக்கும்.

அனாஃபெலிஸ் கொசு பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படும். மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மலேரியா ஒட்டுண்ணிகளில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன:

ப்ளாஸ்மோடியம் விவாக்ஸ்(P.v.) – மிக பெரிய அளவில் பரந்து கிடக்கின்றன

ப்ளாஸ்மோடியம் ஒவேல்(P.o.) – ஒரு அரிய வகை

ப்ளாஸ்மோடியம் மலேரியே(P.m.) – அவ்வளவு பரவலாய் இல்லை

ப்ளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம்(P.f.) – மிகவும் ஆபத்தானவை

1. ப்ளாஸ்மோடியம் விவாக்ஸ்(P.v.) – இந்த வகை உலகம் எங்கும் பரவி கிடக்கின்றன மற்றும் இந்தியாவில் முக்கியமாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவிகித மலேரியா நோய்கள் பி.வி.யால் ஏற்படுகின்றன. இந்த உடல்நலக்குறைவு அதிகம் காணப்பட்டாலும், இது எப்போதாவது மரணம் அல்லது தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அறிகுறிகளில் வயிற்றுப்போக்கு, சோர்வு, மற்றும் குளிர் மற்றும் காய்ச்சல் ஆகியவை அடங்கும். முதல்நிலையில், இந்த மலேரியா அறிகுறிகள் காய்ச்சலைப் போலவே இருக்கும்.

2. ப்ளாஸ்மோடியம் ஒவேல்(P.o.) – வெப்பமண்டல மேற்கு ஆப்பிரிக்க பகுதியில், லிபேரியா, கானா மற்றும் நைஜீரியா உட்பட இடங்களில் அதிகம் காணப்படும் , இது இருப்பதிலேயே அரிய வகை மலேரியா ஆகும். இது அரியது, ஏனெனில் இந்த வகை ஒட்டுண்ணிகள் பாதிக்கப்பட்டவரின் உடலில் நீண்ட காலத்திற்கு இருக்கும் – சில சமயம் ஆண்டுகளுக்கு – கொசு கடித்தபின்.

3. ப்ளாஸ்மோடியம் மலேரியே(P.m.) – இந்த வகை மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும். இது மற்றவைகளைப் போல கொல்லும் வகை அல்ல. ஆனாலும் மூன்றாம் இடத்தில் உள்ளது. குளிர் மற்றும அதிக காய்ச்சல் பொதுவான மலேரியா அறிகுறிகள் ஆகும்.

4. ப்ளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம்(P.f.) – மலேரியா தொடர்பான மிகப்பெரிய இறப்புக்கள் இந்த வகையினால் ஏற்படுகின்றன, மேலும் இவை தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. மயக்கம், தசை வலி, சோர்வு, வயிற்று வலி, இரணம், வலிப்புத்தாக்கங்கள், குமட்டல், வாந்தி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளில் அடங்கும். பக்கவாதம், கடுமையான வலிப்பு, உணர்வின் நிலை மாற்றங்கள் போன்ற கடுமையான அறிகுறிகளும் ஏற்படலாம். இந்த மாறுபாடு மிகக் கடுமையானதாக கருதப்படுவதால், ஆரம்ப நோயறிதல் மற்றும் சரியான நேர சிகிச்சை ஆகியவை மிக முக்கியமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் 300-600 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றன மேலும் குறிபிடத்தக்க எண்ணிக்கையில் இதனால் இறக்கின்றன. இத்தகைய உயர் தொற்று விகிதங்களுடன், இந்த கொடிய நோய் பரவுதலைத் தவிர்க்க சில தடுப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

எப்போதும் செய்ய வேண்டிய எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

உங்கள் உடலை மறைக்கும் ஆடைகளை அணியுங்கள் மேலும் வெளிப்படையாக எந்த பகுதியையும் விட்டுவிடாதீர்கள்.

ஆபத்தான கொசுக்கள் உங்கள் வீட்டின் மூலைகளில் மறைந்திருக்கலாம். மறைந்திருக்கும் கொசுக்களை கொல்ல அனைத்து மூலைகளிலும் தினந்தோறும் கருப்பு ஹிட்டை அடியுங்கள் மற்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திடுங்கள்.

உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

Source:

https://www.malarianomore.org/support/what-is-malaria/
https://www.godrejhit.com/products/kala-hit
https://www.webmd.com/a-to-z-guides/malaria-symptoms#1
https://www.medicinenet.com/malaria_facts/article.htm#what_are_malaria_symptoms_and_signs
https://www.cdc.gov/malaria/about/faqs.html
https://www.onlymyhealth.com/what-types-malaria-1302068689
https://www.unicef.org/health/files/health_africamalaria.pdf

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை ஆராயுங்கள்

kala-hit
hit-anti-mosquito-racquet
சரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்

உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!

  • டெங்கு
  • சிக்கன்குனியா
  • மலேரியா
  • காக்க்ரோஅச்செஸ்
  • மன்த்ளீ கிச்சன் கிளீனிங்
  • எலி