டெங்குவுக்கு எதிராக எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது
டெங்கு வைரஸ், கொசுவினால் உண்டாகும் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று, ஒருவர் முறையான பராமரிப்பு எடுத்தால் தடுக்கப்படலாம். இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.
1. உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
2. எங்கள் வீட்டில் அல்லது வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்க விடாதீர்கள்.
3. மறைந்திருக்கும் கொசுக்களைக் கொல்வதற்காக காலா ஹிட் போன்ற கொசு எதிர்ப்பு ஸ்பிரேக்களை தினசரி உங்கள் வீட்டின் மூலைகளில் தெளிக்கவும்.
4. ஈரமான குப்பையை தனியாக வைத்து ஒரு ஈரமான குப்பைத் தொட்டியில் (மூடி வைக்கப்பட்டுள்ளது) போடவும்.
5. மழைக்காலங்ளில், தேங்கிக்கிடக்கும் நன்னீர் அளவு அதிகரிப்பன் காரணமாக டெங்குவினால் / கொசுவினால் உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; இந்த நிலையில் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.
6. ஏதேனும் தோல் பகுதிகள் வெளிப்படாத ஆடைகளை அணிந்து கொள்ள முயற்சியுங்கள்.
7. ஒரு மஸ்கிடோ ரெப்பெலன்ட்டை தடவிக் கொள்ளவம் அதை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்லவும்.
8. வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும், பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலும் மாலைகளிலும்.
9. ஒரு நாள் பயன்பாட்டிற்கு பிறகு உங்களின் துவலைகளை மாற்றவும்.
10. உங்கள் ஈரமான மற்றும் நீர் ஊறிய ஆடைகள் மற்றும் காலணிகளை உலர்ந்த ஆடைகளில் இருந்து தனியாக வையுங்கள்.
11. இது நமது இல்லங்கள் பற்றியது மட்டுமல்ல, நமது பகுதி மற்றும் நகரம் இரண்டையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்யப்படாத சாக்கடைகளை நீங்கள் எங்கே பார்த்தாலும், அதற்கான ஏதோ ஒரு தீர்வினை கண்டறியவும். உங்கள் உள்ளூர் ” குடியிருப்போர் நல சங்கம்” அல்லது சமுதாயத் தலைவரிடம் அதை எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!