டெங்குவுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
டெங்கு வைரஸ் கொசுக்களால் பரப்பப்படுகிறது, முதன்மையாக ஏடிஸ் எஜிப்டி கொசு. இந்த கொசுக்கள் அதிகாலையில் அல்லது தாமதமான இரவில் கடிப்பதாக அறியப்படுகிறது. ஒரு முறைக் கடிப்பதானால் தொற்று ஏற்படலாம்!
1779ன் ஆரம்பம் முதல் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவப் பதிவுகள் காட்டுகிகன்றன. எனினும், பரவலுக்கான விவரங்கள் மற்றும் நோய்களுக்கான காணரம் 20ஆம் நூற்றாண்டில் தான் வெளிச்சத்திற்கு வந்தன.
முறையான மருத்துவப் பராமரிப்பில் டெங்கு காய்ச்சல் சிகிச்சையளிக்கப்படுவதாக கவனிக்கப்பட்டாலும், அது சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும். இவ்வாறு, ஆரம்ப காலத்தில் கண்டறிவதற்காக, டெங்குவின் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். டெங்குவைக் குறிக்கக் கூடிய சில அறிகள் பற்றி நாம் பார்க்கலாம்.
டெங்குவினால் அவதிப்படக்கூடியவர்கள் வழக்கமாக பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்:
1. அதிக காய்ச்சல்
2. தலைவலி
3. வாந்தி
4. தசை மற்றும் மூட்டுவலி
5. தோல் தடிப்புகள்
இந்த அறிகுறிகள் டெங்குவை குறிக்கவும் செய்யலாம் அல்லது குறிக்காமலும் இருக்கலம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உங்களை சோதித்துக்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது. எனினும், இவை நோயின் ஆரம்ப அறிகுறிகள் தான். சில நேரங்களில் மக்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடும், மற்றும் அது டெங்குவின் மிகத் தீவிர வடிவமாக உருவாகக்கூடிய அறிகுறிகளாவன:
1. இரத்தப் போக்கு
2. இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்
3. இரத்தப் பிளாஸ்மா கசிவது
4. குறைந்த இரத்த அழுத்தம்
டெங்கு ஒரு அபாயமான நோய் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் ஆரம்ப அறிகுறிகளின் போதே மருத்துவ உதவியை உடனடியாக கோர வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது.
உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!