ஆன்டி ரோச் ஜெல்லை பயன்படுத்த சரியான வழி
உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா? நீங்கள் தனியாக இல்லை. உலகெங்கிலும், கரப்பான்கள் பொதுவான வீட்டு பூச்சி ஆகும். கரப்பான்கள் உங்கள் வீட்டிற்குள் பல்வேறு காரணங்களுக்காக வருகின்றன. பொதுவான காரணம் உணவு, பாதுகாப்பு அல்லது நீரைத் தேடி.
கரப்பான்கள் ஒரு இடத்தை ஆக்கிரமித்த பின், அவை விரைவில் பன்மடங்காகும் மேலும் உங்கள் சௌகரியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தீவிர ஆபத்தானவைகளாக ஆகும். ஹிட் ஆன்டி ரோச் ஜெல் உங்கள் வீட்டில் இருக்கும் கரப்பான்கள் கூட்டை அகற்ற ஒரு தேர்வாகும். ஜெல் ஒரு புதிய சூத்திரம் ஆகும் அவை கரப்பான்களை ஈர்த்து அதை தின்ன வைக்கும். கரப்பான்கள் ஜெல்லைத் தின்று, அவற்றின் கூட்டிற்கு சென்று இறக்கும். இறந்த கரப்பான்களுக்கு அருகில் செல்லும் பிற கரப்பான்களும் இறந்துவிடும், இதனால் கரப்பான் கூடே அழிந்துவிடும்.
இது கரப்பான்களை அகற்ற மிகவும் பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் எளிதான வழிமுறைகளில் ஒன்றாகும். எனினும், நீங்கள் அதன் விளைவை அதிகரிக்க விரும்பினால், ஜெல்லை சரியாக பயன்படுத்த வேண்டும். வீட்டில் ஆன்டி ரோச் ஜெல்லைப் பயன்படுத்த நாங்கள் உங்களுக்கு சரியான வழிகளைக் கொண்டு வருகிறோம்:
1. முதல் முறையாக அதை பயன்படுத்த - நீங்கள் முதல் முறையாக ஜெல்லப் பயன்படுத்தும்போது, ஜெல் வெளியே வர நீங்கள் 7-8 முறை டியூபை அழுத்த வேண்டும். டியூப் சரியாக திறக்கப்பட்ட பின் மற்றும் ஜெல் வெளியே வரும்போது, அது ஒரே அழுத்தத்தில் வெளியே வரும்.
2. எப்படி உபயோகிப்பது -ஜெல் புள்ளிகளை உங்கள் மரச்சாமான்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து 5-10 செ.மீ. தொலைவில் உபயோகிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. சமையலறையின் உலர்ந்த பகுதிகளில் மட்டும் குறைந்தது 20 மூலைகளில் ஜெல்லை உபயோகியுங்கள்.
3. எங்கே உபயோகிக்க வேண்டும் - சிறப்பாக, உங்கள் அலமாரி கதவின் கீல்கள், அலமாரிகளின் கீழ், விளிம்புகள் வழியாக மற்றும் உங்கள் மரசாமாங்களின் விரிசல் மற்றும் பிளவுகளில் நீங்கள் ஜெல்லை உபயொகிக்க வேண்டும். கரப்பான் பூச்சிகளால் ஏற்படும் தொற்று அதிகமாக இருக்கும் எல்லா இடங்களிலும் ஜெல் புள்ளிகளைப் பயன்படுத்துங்கள். உபயொகிக்க வேண்டிய மற்ற பகுதிகள்- குளிர்சாதன மற்றும் மைக்ரோவேவ் கீழே, உங்கள் சமையலறை சிங்க் கீழே, எரிவாயு சிலிண்டர் கீழ் மற்றும் உங்கள் வீட்டை சுற்றி மற்ற முடுக்குகள் மற்றும் மூலைகளும் அடங்கும்.
4. தவிர்க்க வேண்டிய இடங்கள் - ஈரமான பகுதிகளில் ஜெல் உபயொகிப்பதைத் தவிர்க்கவும். மேலும், தண்ணீருக்கான வாய்ப்புகள் இருந்தால், அங்கே உபயொகிக்க முயற்சி செய்யாதீர்கள். ஜெல் எளிதில் அழிக்கப்படாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
5. எப்போது மீண்டும் உபயோகிக்க வேண்டும் – சிறந்த முடிவுகளுக்கு, 45 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உபயோகிக்கவும்.
ஆன்டி ரோச் ஜெல் உபயோகிக்க மிகவும் வசதியாக உள்ளது. இது மணமற்றது, பயன்பாட்டிற்கு முன்னும் பின்னும் எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது. வழக்கமாக, உணவும் தண்ணீரும் எளிதாக கிடைக்கும் என்பதால் கரப்பான்கள் சமையலறையில் தான் அதிக எண்ணிக்கையில் காணப்படும். வெறும் 5 நிமிடங்களில், உங்கள் சமையலறை முழுவதும் 20 புள்ளி ஜெல்லை உங்களால் உபயோகிக்க முடியும். ஜெல்லை உபயோகித்த பின், உங்கள் வீட்டில் உள்ள கரப்பான்கள் முழுவதும் தானாகவே அழிந்துவிடும் எனவே நீங்கள் ஓய்வெடுக்கலாம்.
உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!